மீன் வாங்க போட்டா போட்டி : ஒரே நேரத்தில் கூட்டம் கூடியதால் நோய் தொற்று பரவும் அபாயம்!!!

19 April 2021, 2:16 pm
fish Market Crowd -Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : மீன்பிடி தடை காலம் துவங்கிய நிலையில் முக கவசம் இன்றி மீன் வாங்க மீனவர்கள் அதிக அளவில் மீனவர்கள் ஒரே நேரத்தில் கூடுவதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மீன்களின் இனப்பெருக்கத்திற்காக தமிழகத்தின் கிழக்குக் கடற்கரை பகுதிகளில் கடந்த 14ஆம் தேதி நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியதோடு, இரண்டு மாதங்கள் இந்த தடை காலம் நீடிக்கும்.

ஆனால், கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு கடற்கரை பகுதிகளில் மீன்பிடித் தொழில் நடைபெற்று வரும் நிலையில், நூற்றுக்கணக்கான மீனவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரை பகுதிகளில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் மீன் வாங்க வருகின்றனர்.

இதனால் முட்டம், குளச்சல், தேங்காய்பட்டணம் போன்ற மீன்பிடி துறைமுகங்களில் விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகளில் கரை சேர்க்கப்படும் மீன்களை வாங்க மீனவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.

தற்போது, கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், மீன்பிடி துறைமுகங்களில் அதிக அளவில் குவியும் மீனவர்களால் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படாத நிலை காணப்படுகிறது.

ஏற்கனவே கொரோனா முதல் அலை பரவலின் போது பல பகுதிகளில் காவல்துறையினரின் பாதுகாப்போடு சமூக இடைவெளியுடன் பொதுமக்கள் வரிசையில் நின்று மீன் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால், தற்போது பொது இடங்களில் பொது மக்கள் கூடுவதை தவிர்க்க அரசால் தீவிர கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும், மீன்பிடி துறைமுகங்களில் மீன்கள் வாங்குவதற்கு குவியும் பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் முக கவசங்கள் அணிந்து வருகிறார்களா? என கண்காணித்து கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற மீன்வளத் துறையும் காவல் துறையும் போதிய அக்கறை காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

இந்நிலை தொடர்ந்தால் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகம் பரவ வாய்ப்புள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

Views: - 42

0

0