வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் : 3 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வீடுகளில் அதிரடி சோதனை…

Author: kavin kumar
18 February 2022, 2:47 pm
Quick Share

தருமபுரி : தருமபுரி மாவட்டத்தில் பணியின் போது அரசு பணத்தை முறைகேடு செய்ததாக ஒரே நேரத்தில் 3 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம் மொரப்பூரில் வட்டார வளர்சி அலுவலராக பணிபுரிந்து வருபவர் மதலைமுத்து, ஏரியூரில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வருபவர் ஜெயராமன், அதே போல் தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திட்ட இயங்குனரின் நேர்முக உதவியாளராக பணிபுரிந்து வருபவர் ஆனந்தன், இவர்கள் மூவரும் பணியில் இருந்த போது அரசு பணத்தை முறைகேடு செய்ததாகவும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு தொடர் புகார் குவிந்த வண்ணம் இருந்தது.

இதையடுத்து லஞ்ச ஒழிப்புதுறையினர் துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் மதலை முத்துவின் சொந்த வீடான தருமபுரி அடுத்த ஏமக்குட்டியூர் அடுத்த அதியமான் நகரிலும், அரூர் அடுத்த குறுஞ்சி நகரில் உள்ள ஆனந்தனுக்கு சொந்தமான வீட்டில் ஆய்வாளர் நரேந்திரன் தலைமையிலும், பாப்பிரெட்டிபட்டி அருகே ஏ.பள்ளிபட்டியில் உள்ள ஜெயராமனுக்கு சொந்தமான வீட்டில் ஆய்வாளர் பழனிசாமி தலைமையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் 5 பேர் கொண்ட குழு தனித்தனியாக காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த மூன்று பேரும் இன்னும் ஓரிரு மாதங்களில் பணி ஓய்வு பெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 756

0

0