மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகார் : முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலை பள்ளி ஆசிரியர் மீது குண்டாஸ்!!

13 July 2021, 9:38 am
Teacher in Gundas - Updatenews360
Quick Share

ராமநாதபுரம் : முதுகுளத்தூர் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர் ஹபீப் முகமது மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

ராமநாதபுரம், முதுகுளத்தூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றியவர் ஆசிரியர் ஹபீப் முகமது. பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாக பேசி, பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட ஆசிரியர் ஹபீப் முகமது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த 22-ம் தேதி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இவரிடம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விசாரணை மேற்கொண்ட நிலையில், அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இதனையடுத்து, ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக், இவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் சந்திரகலாவிடம் பரிந்துரை செய்துள்ளார். இதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் ஹபீப் முகமதை குண்டர் சட்டத்தில் கீழ் கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Views: - 194

1

0