திருப்பூர்: பார் நடத்துவதற்காக கடையை வாடகைக்கு விட்ட விவகாரத்தில் பத்திரிக்கையாளர்கள் எனக் கூறிக் கொண்டு, தன்னை பற்றி சமூகவலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பரவச் செய்வதாக அதிமுக பிரமுகர் சந்திரசேகர் திருப்பூர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
இதுகுறித்து அதிமுக பிரமுகர் சந்திரசேகர் புகார் மனுவில் கூறியதாவது:-
அதிமுகவில் கட்சியில் பொறுப்பில் இருக்கிறேன். எனது இடத்தில் 23/13 என்ற எண் கொண்ட டாஸ்மார்க் கடை இயங்கி வருகிறது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு எனது கடையை ஜெயராம் என்பவருக்கு நான் வாடகை அடிப்படையில் அட்வான்ஸ் பெற்றுக் கொண்டு வாடகைக்கு பார் நடத்த பொறுப்பை ஒப்படைத்து விட்டேன்.
அந்த சமயத்தில் ஜெயராமன் வேறு ஒருவருக்கு பத்து லட்சத்தில் பேசி 5 லட்சம் ரூபாய்க்கு அட்வான்ஸ் பெற்றுக் கொண்டு வாடகைக்கு கொடுத்து விட்டதாக தெரிய வருகிறது. அதன் பின்பு அவர்கள் மீதி தொகையை கொடுக்காததால் அவருக்கு அவர் கடையை ஒப்படைக்கவில்லை.
இதன் பின்பு டாஸ்மார்க் நிர்வாகம் பார் நடத்தும் உரிமையை அர்ஜுன் அவர்கள் பெற்றுவிட்டதால் பின்பு நான் ஜெயராமனிடம் கணக்கு வழக்கை முடித்துக் கொண்டு அர்ஜூன் வசம் அவர்களின் நபர்கள் வசம் கடையை ஒப்படைத்து விட்டேன். இதன்பின்பு ஜெயராமன் அட்வான்ஸ் ஆக பெற்ற 5 இலட்சம் ரூபாயில்” 2.5 இலட்சத்தை திருப்பி கொடுத்தாக தெரிய வருகிறது.
மீதித் தொகையை ஜெயராமன் கொடுக்கவில்லை என்றும் என்னிடம் பத்திரிக்கையாளர்கள் என்று கூறிக் கொண்டு செல்வநாயகம் என்பவரும் தந்தி டிவியில் இருக்கிறேன் என்று கூறிக் கொண்டு சையது என்பவரும் 5 இலட்சம் அட்வான்ஸ் கொடுத்து மாரிமுத்து அகஸ்தியன் சுப்பிரமணி ஆகியோரை அழைத்திக் கொண்டு எனது வீட்டிற்கு வந்து என்னிடம் முறையிட்டனர் நான் ஜெயராமிடம் இந்த பிரச்சனையை நீங்களே தீர்த்துக் தொள்ள வேண்டும் என்று நான் கூறிவிட்டேன்.
பத்திரிக்கையாளர்கள் போர்வையில் வந்த செல்வநாயகம் என்பவரும் சையது என்பவரும் சம்பந்தமும் இல்லாத எனது பெயரையும் எனது துனைவியின் பெயரையும் கெடுக்கும் நோக்கத்தில் எனது பழைய புகைப்படங்களை பேஸ்புக்கில் இருந்து எடுத்து எங்களுக்கு சம்மந்தம் இல்லாத நபர்களிடம் கொடுத்து மீடியாவிற்கு பேட்டி கொடுத்துள்ளார். வலைத்தளங்களிலும் பதிவிட்டுள்ளார்.
நற்பெயருடன் நானும் எனது மனைவி சங்கீதா அஇஅதிமுகாலில் இணை செயலாளராகவும் ஒன்றிய கவுன்சிலர் ஆகவும் இருக்கிறார். அதிமுகவில் கட்சியில் இருந்து சமூக சேவை செய்து வரும் எங்களின் பெயரை கெடுக்கும் நோக்குடன் செல்போனில் எங்களை மிரட்டிய செல்வநாயகம் மீதும் எனது வீட்டிற்கு தன்னையும், பெண் என்று பாராமல் என் மனைவியையும் மிரட்டிய செல்வநாயகம், சையதுகான் மற்றும் மாரிமுத்து உட்பட மொத்தம் 5(ஐந்து) பேர்மீதும் தக்க நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்குமாறு கூறியுள்ளார்.
இவ்வாறு அவர் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாஜக வடக்கு மண்டல் தலைவராக பாலகிருஷ்ணன் என்பவரது பதவி ஏற்பு விழா உசிலம்பட்டியில் உள்ள தனியார்…
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
This website uses cookies.