தரமற்ற சாலை குறித்து மாநகராட்சியிடம் Complaint : புகாரளித்தவரின் வீட்டு முன் சாலையை போடாமல் மிரட்டும் ஒப்பந்ததாரர்..!!

Author: Udayachandran RadhaKrishnan
1 April 2022, 6:20 pm
Road Issue - Updatenews360
Quick Share

சென்னை : சேலையூரில் சாலை அமைக்கும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் புகாரளித்தவரின் வீட்டிற்கு முன்னால் உள்ள பகுதிக்கு மட்டும்சாலை போடாமல் பணியை முடித்த ஒப்பந்ததாரர்கள். இதுகுறித்து வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சேலையூர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் இளங்கோ ரகுபதி. இவர் குடியிருக்கும் பகுதியில் தற்போது மாநகராட்சி சார்பில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இவர் வீடு இருக்கும் பகுதி மழை மற்றும் வெள்ளம் போன்ற சமயங்களில் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சாலை அமைக்கும் பணியில் முறைகேடு நடப்பதாகவும், புதிய சாலை அமைக்கும் முன் பழைய சாலையை தோண்டி எடுத்த பின்பே சாலை அமைக்கும் பணியினை மேற்கொள்ள வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்து தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகளிடம் இளங்கோ ரகுபதி நேரடியாக புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களை அதிகாரிகள் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் இளங்கோ ரகுபதியிடம் புகாரை திரும்ப பெறும்படி கூறியுள்ளனர். இதற்கு இளங்கோ மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அந்த பகுதியில் சாலைகள் அமைக்கும் போது, புகாரளித்த இளங்கோ ரகுபதியின் வீட்டிற்கு முன்னால் உள்ள பகுதிக்கு மட்டும் சுமார் 80 மீட்டர் சாலை போடாமல் பணிகளை ஒப்பந்த தாரர்கள் முடித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த இளங்கோ இதனை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது, தகவலை இணையத்தில் வைரலாகி, இதற்கு கண்டனம் எழுந்து வருகிறது.

Views: - 576

1

0