சாம்ராஜ் நகரில் தளர்வுகளின்றி முழு ஊரடங்கு : பொதுமக்கள் வெளியே வரத் தடை!!

11 May 2021, 12:39 pm
Samraj Nagar - Updatenews360
Quick Share

கர்நாடகா : சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மே 13 ஆம் தேதி முதல் மே 16 ஆம் தேதி வரை எந்த விதமான தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளதால்
மே 10 ம் தேதி முதல் மே 24 ம் தேதி வரை சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த ஊரடங்கில் காலை 6 மணி முதல் 10 மணி வரை காய்கறிகள், மளிகை சாமான்கள், இறைச்சிகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி செல்ல நேரம் ஒதுக்கபட்டிருந்தது.
இந்த நிலையில் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் தினசரி கொரானா பாதிப்பு அதிகரித்து வருகிறது..
மாவட்ட அரசு மருத்துவமனையில் ஆக்சிசன் பற்றாக்குறையாலும், படுக்கை வசதி இல்லாத நாளும் தொடர்ச்சியாக இறந்து வருகின்றனர். மேலும் பாதிப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனை கட்டுப்படுத்தும் விதமாக சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் மட்டும் தளர்வுகள் ஏதுமின்றி முழு ஊரடங்கை அமல் படுத்த அரசு திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில் மே 13 ம் தேதி முதல் மே 16 ம் தேதி வரை எந்தவிதமான தளர்வுகளும் இல்லாமலும்,முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

இந்த முழு ஊரடங்கில் பால் மற்றும் மருத்துவ தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் எனவும், மற்ற எந்த விதமான தேவைகளுக்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது எனவும் அறிவித்துள்ளது. எனவே அத்தியாவசிய பொருட்களை முன்கூட்டியே திட்டமிட்டு வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 131

0

0