சவுக்கு குச்சிக்கு கான்கிரீட்.. .அடேய் அப்பரசின்டுகளா : அதிமேதாவிகளாக வலம் வரும் அதிகாரிகள்… வைரலாகும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
12 September 2022, 4:33 pm
Concrete - Updatenews360
Quick Share

தமிழக அளவில் ஆங்காங்கே ஒப்பந்ததாரர்களின் ஒப்பற்ற செயல்கள் இந்திய அளவில் வைரலாகி வரும் நிலையில், கரூரில் சாக்கடை கால்வாய்களில் இருந்து கழிவு நீர் வெளியேற்றாமல் கான்க்ரீட், புத்தக கண்காட்சியில் வெள்ள நீர் இதெல்லாம் வைரலான நிலையில் தற்போது புத்தக கண்காட்சி நடைபெற்ற இடத்தில் அவசர, அவசரமாக புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி அந்த இடத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இது ஒருபக்கம் இருந்தாலும், தற்போது ஒப்பந்ததார்கள் தடுப்பு வேலிக்காக சவுக்கு மரங்களை நட்டு அதில் கான்கிரீட் போட்டுள்ளது வியப்பின் உச்சத்தில் கொண்டு சென்றுள்ளது.

சவுக்கு குச்சிக்கு கான்கிரிட் போட்ட பலே காண்ட்ராக்டர் நல்ல varuvanga என்கின்ற வாசகங்களுடன் சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகின்றது.

Views: - 373

0

0