விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துக்களை கூற முடியுமா? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜகவினர் சவால்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 September 2021, 5:22 pm
BJP Letter To CM - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காத தமிழக முதலமைச்சருக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தபால் அட்டைகள் அனுப்பும் நிகழ்ச்சி திண்டுக்கல்லில் நடைபெற்றது.

தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு, இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்க மறுப்பதாகவும் அவருக்கு அதை நினைவூட்டும் வகையில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் இருந்து தபால் அட்டைகள் மூலம் வாழ்த்து மடல் எழுதி அனுப்புமாறு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்ததார்.

இதையடுத்து திண்டுக்கல் பாஜக தலைவர் சதிஷ்குமார், தமிழக முதலமைச்சருக்கு, ஊராட்சிகளின் முதல்வர் ஸ்டாலினுக்கு என்று கடிதம் எழுதியுள்ளார். அதில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவிக்கும் விதமாக தபால் அட்டைகளில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அனுப்பப்பட்டது.

ஏராளமான பாஜகவினர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அனுப்பினர்.விநாயகர் சதுர்த்தி வரை தொடர்ந்து வாழ்த்து அனுப்பப்படுமென தெரிவித்தனர்.

Views: - 367

0

0