அப்பாவை போலவே கட்சி விட்டு கட்சி தாவும் மகன் : அதிமுகவில் சேரும் காங்கிரஸ் பிரமுகர்!!
22 January 2021, 10:36 amஅப்பாவை போலவே மகனும் காங்கிரஸ் கட்சியில் இருந்து அதிமுகவுக்கு தாவுவதாக தகவல் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணி கட்சிகள் வேறு கட்சிக்கு மாறுவதும், முக்கிய பிரமுகர்கள் கட்சி விட்டு கட்சி தாவுவதும் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் அதிமுகவுக்கு செல்ல முடிவு எடுத்துள்ளார்.
காங்கிரஸ் செயல் தலைவர்களில் ஒருவரான மோகன் குமாரமங்கலம் கட்சி மீது அதிருப்தியில் உள்ளார். இதற்கு முக்கிய காரணம், இவர் பரிந்துரைத்த ஆட்களுக்கு கட்சியில் பதவி தரவில்லை என்பதால்தான்.
இவரது தந்தை ரங்கராஜன் குமாரமங்கலம், காங்கிரஸ் சார்பாக இருமுறை எம்பியாக இருந்தவர். பின்னர் பாஜகவுக்கு தாவி மத்திய அமைச்சராகவும் செயல்பட்டார். இந்த நிலையில் மோகன் குமாரமங்கலத்தின் அத்தை லலிதா குமாரமங்கலம் பாஜகவில் உள்ளார்.
தற்போத காங்கிரஸ் கட்சி மேல் விரக்தியில் உள்ளதால் பாஜகவுக்கு தாவி விடலாம் என்ற யோசனையில் உள்ளாராம். ஒரு வேளை ஓமலூர் தொகுதியலி சீட் கிடைத்தால் அதிமுகவுக்கு தாவலாம் என்ற எண்ணமும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
0
0