ராகுல் கைது செய்யப்பட்ட ஊரின் பெயர் தெரியாமல் கட்சியனர் “திருதிரு“ : ஆர்ப்பாட்டத்தில் “கலகல“

1 October 2020, 8:02 pm
Congress - updatenews360
Quick Share

திருப்பூர் : ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து, மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்த போது ராகுல்காந்தி கைது செய்யப்பட்ட ஊரின் பெயர் தெரியாதல் நிர்வாகிகள் திரு திருவென விழித்தனர்.

உத்தரபிரதேசம் மாநிலம், ஆத்ராஸ் பகுதியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்த பெண்ணின் வீட்டுக்கு செல்லும் வழியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கைது செய்யப்பட்டார்.

இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் ரயில்நிலையம் முன்பாக, மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம் முடிவடைந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேட்டி அளிக்க வந்த நிர்வாகிகள் ராகுல்காந்தி கைது செய்யப்பட்ட ஊரின் பெயர் தெரியாமல் திருதிரு என விழித்தனர். இந்த சம்பவம் சக நிர்வாககிகளிடையே அதிப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 57

0

0