தமிழகத் துறையை கலைத்து சிபிஐயுடன் இணைத்து விட வேண்டும் என்று சிவகங்கை பாராளுமன்ற எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே புதுப்பட்டி உள்ள காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பின் எம்பி கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- தமிழக முதல்வர் மெகா கூட்டணிக்காக பீகார் செல்வது காலத்தின் கட்டாயம். மத்திய அரசின் கைக்கூலியாக அமலாக்கத்துறை செயல்பட்டு வருகிறது.அமலாக்கத் துறையை கலைத்து சிபிஐயுடன் இணைத்து விட வேண்டும். சிபிஐக்கு விதிமுறைகள் உள்ளது. ஆனால், அமலாக்க துறைக்கு எந்த விதிமுறைகளும் இல்லை. முழுக்க முழுக்க பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக இருக்கும் கட்சிகளை அச்சுறுத்தும் இயக்கமாகவே செயல்பட்டு வருகிறது.
தனியார் மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிப்பது என்பது அவருடைய தனிப்பட்ட விருப்பம். தனி மனித சுதந்திரம். வருமான வரித்துறை சோதனைக்கு தமிழக அரசிடம் அனுமதி பெறுவது என்பது நடைமுறைக்கு சாத்தியமா..? என தெரியவில்லை. ஆனால், பல மாநிலங்களில் நடைமுறையில் இருந்து வருகிறது.
மத்திய அரசின் வீடு கட்ட வழங்கும் தொகை மிக குறைவாக உள்ளது. இத்திட்டத்தினால் பலர் கடனாளியாகிறார்கள், ஏனென்றால் செங்கல், மணல் விலை அதிகரித்து வருகிறது. அதனால், மத்திய, மாநில அரசுகள் வீடு கட்ட வழங்கும் தொகையை அதிகரிக்க வேண்டும், என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் காரைக்குடி எம்எல்ஏ மாங்குடி, மாவட்ட காங்கிரஸ் தலைவர் (தெற்கு) ராம.சுப்புராம் முன்னாள் சேர்மன் ஜெயலட்சுமி, வட்டார காங்கிரஸ் தலைவர் கணேசன், நகரத் தலைவர் முத்தையா, கிராம காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.