பாஜக மீது மக்களுக்கு கோபம்… இது மோடியின் வீழ்ச்சிக்கான ஆரம்பம் தான் ; அடித்து சொல்லும் திருநாவுக்கரசர்..!!

Author: Babu Lakshmanan
13 May 2023, 3:53 pm
Quick Share

மத்தியிலும் சரி, கர்நாடகாவிலம் சரி, பாஜக அரசுகள் மீது கடும் கோபத்தில் பொதுமக்கள் உள்ளதாகவும், கர்நாடகா தேர்தல் முடிவுகளே அதனை வெளிப்படுத்துவதாக திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் ;- கர்நாடகா தேர்தல் பிரச்சாரத்தின் போது தங்களுக்கு காங்கிரஸ் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருந்தது. எல்லா கருத்துக்கணிப்புகளுமே காங்கிரஸ் அதிக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறும் என்று கூறியது. காங்கிரஸ் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே பிரதமர் மோடி ஐந்து நாள் சுற்றுப்பயணம் செய்து வீதி வீதியாக பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

மோடியின் ஆட்சியில் அதிருப்தி, ஐந்து ஆண்டுகால கர்நாடகா பாஜக அரசின் அதிருப்தி, 40 சதவீத கமிஷன் விவகாரம் உள்ளிட்டவைகளால் மக்கள் மத்தியில் பாஜகவிற்கு கடும் அதிருப்தி நிலவி இருந்தது. நாம் தேர்தல் களத்தில் கண்கூடாக பார்க்க முடிந்தது. கர்நாடகா தேர்தல் வெற்றி என்பது வரும் பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கு தொடக்கமாகும்.

கர்நாடக தேர்தல் முடிவுகள் மோடிக்கு ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, மோடியின் தோல்விக்கான தொடக்கம். பிரதமர் மோடி கர்நாடகா தேர்தல் முடிவை பார்த்து தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இந்த முடிவுகள் வரும் பாராளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும். மத்தியிலும் சரி கர்நாடக கர்நாடகாவிலம் சரி பாஜக அரசுகள் மீது கடும் கோபத்தில் பொதுமக்கள் உள்ளனர் என்பதே கர்நாடகா தேர்தல் முடிவு காட்டுகிறது.

ஜாதியை மையமாக வைத்து கட்சியை நடத்திக் கொண்டு, அதில் வெற்றி பெற்று பேரம் பேசி முதலமைச்சராகவோ, அமைச்சர்களாகவோ, வந்தால் போதும் என்று இதுநாள் வரை செயல்பட்டு வந்த குமாரசாமி மற்றும் அவர்கள் கட்சி வேட்பாளர்களுக்கு சரியான பாடத்தை மக்கள் புகத்தியுள்ளனர். 10 அமைச்சர்கள் தோல்வி முகத்தில் உள்ளது என்பது அவர்கள் மக்கள் மத்தியில் எவ்வளவு அதிருப்தியை சம்பாதித்துள்ளனர் என்பதை காட்டுகிறது.

அண்ணாமலை எங்களுக்கு ஒரு ஆளே அல்ல. அவருக்காக கர்நாடகாவில் பாஜகவிற்கு வாக்குகள் விழவில்லை. அவர் அங்கு இருந்ததால் பாஜக தோல்வியுற்றது என்பதில் ஏற்க முடியாது. விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. இதற்கு எந்த தீர்வும் மத்திய அரசு எடுக்கவில்லை. மத்திய அரசு விளம்பர அரசாக செயல்படுகிறது, தவிர மக்களுக்கான அரசாங்க செயல்படவில்லை.

எல்லா எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படும் காலமும் கனிந்து வருகிறது. இதனால், மத்தியில் மோடி அரசு வீழ்த்தப்படும். இதற்கான அடையாளமே கர்நாடகா தேர்தல் முடிவு. கர்நாடகாவில் குதிரை பேரத்திற்கு எல்லாம் வேலை இல்லை. காங்கிரஸ் இறுதி பெரும்பான்மை வெற்றி பெற்று தனிப்படியாக ஆட்சி அமைக்கும், என தெரிவித்துள்ளார்.

Views: - 295

0

0