ஒரு நியாயம் வேண்டாமா? கட்சியில் இருந்து நீக்கப்பட்டவருக்கு திமுக கொடுத்த பதவி… ஷாக் ஆன காங்கிரஸ் : போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
21 March 2022, 5:20 pm
Congress Protest Against DMK - Updatenews360
Quick Share

ஒதுக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் பதவி திமுக சார்பில் போட்டியிட்டு வென்ற நபர் நகராட்சியில் முதல் கூட்டம் நடத்தியதால் காங்கிரஸ் கட்சியினர் முற்றுகை

சூலூர் கருமத்தம்பட்டி நகராட்சி கூட்டத்தின்போது காங்கிரஸ் தலைமைப் பதவியை விட்டு கொடுக்காத் தினால் காங்கிரஸ் கட்சியினர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் சூலூர் கருமத்தம்பட்டியில் புதிதாக உருவாக்கப்பட்ட நகராட்சியில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் 21 பேர் வெற்றி பெற்றனர்.

இதனையடுத்து தலைவர் பதவி காங்கிரசுக்கு ஒதுக்குவதாக திமுக தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில் தலைவர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக் கொடுக்காமல் திமுகவை சேர்ந்த ஒன்றிய பொறுப்பாளர் நித்தியா மனோகரன் தலைவராக வெற்றி பெற்றார்.

இதனை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்ட பாலசுப்பிரமணியம் காங்கிரஸ் கட்சி மேலிடத்திற்கு புகார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என கூறி சுயேட்சையாக போட்டியிட்ட யுவராஜ் என்பவரை துணைத் தலைவராக தேர்ந்தெடுத்தனர்.

இதைக் கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. நகராட்சி சார்பாக முதல் கூட்டமானது நடைபெற்றது. அந்த கூட்டத்தை புறக்கணித்து காங்கிரஸ் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

100க்கும் மேற்பட்டவர்கள் முற்றுகை போரட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் விஎம்சி மனோகரன், தலைவர் பதவியும் துணைத் தலைவர் பதவியும் திமுகவினர் தலைமையை மீறி செயல்பட்டு இருப்பதாகவும், இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கூட்டணி தர்மத்தைப் பாதுகாக்க வேண்டும் எனவும், கோரிக்கை விடுத்துள்ளார்.

காங்கிரஸ் இல்லாத நபரையும் காங்கிரசை விட்டு நீக்கிய நபரை துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டது வன்மையாகக் கண்டிக்ககூடியது என தெரிவித்தார்.

Views: - 664

0

0