பெட்ரோல் போட துட்டு இல்ல.. யாராவது பிச்சை போடுங்கம்மா : காங்கிரஸ் பெண் நிர்வாகியின் நூதன போராட்டம்!!

4 July 2021, 4:12 pm
congress Executive Protest - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : பெட்ரோல் போட துட்டு இல்லை.. யாராவது பிச்சை போடுங்கம்மா என கேட்டு குமரி மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி பெட்ரோல் பங்க் முன்பு தனிநபராக போராட்டம் நடத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பெட்ரோல் டீசல் வரலாறு காணாத அளவில் விலை உயர்த்தப்பட்டு வருகிறது .தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100ஐ கடந்துவிட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மாநிலம் முழுவதும் பல்வேறு கட்சியினர் தறபோது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நாகர்கோவில் சுங்கான் கடை பகுதியை சேர்ந்த காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாவட்ட துணைத்தலைவர் சனா நாகர்கோவில் களியக்காவிளை சாலையோரத்தில் கள்ளியங்காடு பகுதியில் பெட்ரோல் பங்க் முன்பு அமர்ந்து, காலி கேன் மற்றும் தட்டு, மண்பாத்திரம் ஆகியவற்றை ஏந்தியவாறும் ஒரு கையில் காங்கிரஸ் கொடியை ஏந்தியபடி தனியாக அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார் .

கடந்த ஒரு வாரம் முன்னதாக நடைபெற்ற இந்த போராட்டத்தில் அய்யாசாமி பெட்ரோல் போட துட்டு இல்லை யாராவது பிச்சை போடுங்கம்மா என்று கேட்டு அவர் பிச்சை எடுக்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Views: - 257

0

0