கோவை குனியமுத்தூரில் புதிய தார் சாலை அமைக்கும் பணி : அமைச்சர் எஸ்.பி வேலுமணி துவக்கி வைத்தார்!!

By: Udayachandran
2 October 2020, 5:55 pm
SP Velu 2 - updatenews360
Quick Share

கோவை : குனியமுத்தூர் உட்பட பல்வேறு பகுதிகளில் புதிய தார் சாலை அமைப்பதற்கான பணிகளுக்கான பூமி பூஜையில் தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார்.

கோவை குனியமுத்தூர் பகுதிகளில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகள்,மற்றும் பல்வேறு அடிப்படை வசதிகளுக்கான பணிகளுக்கான பூமி பூஜையில் அமைச்சர் வேலுமணி கலந்து கொண்டு பணிகளை துவக்கி வருகிறார்.

இந்நிலையில் குனியமுத்தூர் 88 வது வார்டு கே.ஏ.எஸ்.நகர் பகுதியில் ரூ.47 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகளை அமைச்சர் வேலுமணி துவக்கி வைத்தார். தொடர்ந்து அந்த பகுதி பொது மக்களுக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சத்து மாத்திரைகள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினார்.

இதனை தொடர்ந்து அமைச்சர் வேலுமணியை கே.ஏ.எஸ்.குடியிருப்போர் நல சங்கத்தின் நிர்வாகிகள் பாலசந்திரன்,முகம்மது ரபி,ராபர்ட் பாண்டியன் உட்பட பலர் சந்தித்து தங்களது பகுதியில் கண்காணிப்பு கேமரா வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை விடுத்தனர்.

உடனடியாக அமைச்சர் அவர்களது கோரிக்கை பரிசீலனை செய்து நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி அதிகாரிகள் உட்பட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Views: - 49

0

0