வரும் 21ஆம் தேதி அமைச்சர்களுடன் எம்.எல்.ஏ.க்களுடன் மீண்டும் ஆலோசனை : முதலமைச்சர் நாராயணசாமி!!

19 February 2021, 10:51 am
Narayanasamy - Updatenews360
Quick Share

புதுச்சேரி : வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவை புதுச்சேரி மக்கள் விரட்டியடிப்பார்கள் என நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் பெரம்பான்மையை நிரூபிக்க வேண்டும் என துணை நிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ள நிலையில், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டார்.

இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, பெரும்பான்மை நிரூபிப்பது தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்துகள் கேட்கப்பட்டது..
இந்த கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. மீண்டும் 21ம் தேதி காங்கிரஸ் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் கூட்டம் நடைபெற உள்ளது. அதன்பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்.

சட்டமன்ற உறுப்பினர்களை விலை பேசும் வேலையில் பாஜக ஈடுபட்டுள்ளது. பல மாநிலங்களில் கோடிகணக்கான பணத்தை செலவு செய்து பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. இது பாஜகவிற்கு கைவந்த கலை. அதிகார பலம், பண பலத்தை வைத்து பல்வேறு மாநிலங்களில் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையில் பாஜக ஈடுபட்டுள்ளது.

ரங்கசாமி ஆட்சியை கவிழ்க எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேரம் பேசினார் இதையெல்லாம் நாங்கள் முறியடித்துள்ளோம். ஆளும் காங்கிரஸ் மற்றும் திமுக இடையே கருத்து வேறுபாடு இருந்தாலும் பேரவையில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக வாக்களிப்போம் என திமுக சட்டமன்ற கட்சித்தலைவர் சிவா தெரிவித்துள்ளார்.

பாஜகவின் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையை மக்கள் பார்த்துகொண்டிருக்கிறார்கள், வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியை மக்கள் விரட்டியடிப்பார்கள். 3 நியமன சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்க உரிமை இல்லை இது குறித்து சட்ட ரீதியான நடவடிக்கையில் ஈடுபடுவோம். பாஜகவின் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையை முறியடிப்போம் என நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Views: - 3

0

0