தொடர் மழை.. கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு : தடுப்பு வேலியை தாண்டி ஆர்பரித்து கொட்டும் திற்பரப்பு அருவி!!

11 July 2021, 10:15 am
Thirparappu Falls - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : தொடர் மழை காரணமாக கோதையாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தடுப்பு வேலியை தாண்டி திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்து வெள்ளம் பாய்கிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது இதனால் 48 அடி மொத்த கொள்ளளவு கொண்ட பேச்சிபாறை அணையில் இருந்து முவாயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

இது போன்று 18 அடி மொத்த கொள்ளளவு கொண்ட சிற்றார் அணையில் இருந்து ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றபட்டு வருகிறது. இதனால் கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இதனால் திற்பரப்பு அருவியில் வெள்ளம் தடுப்பு வேலியை தாண்டி ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் நீச்சல்குளம், கல் மண்டபம் நீர் மூழ்கி செல்கிறது இந்த தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் கலப்பதால் தாமிரபரணி ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் சிதறால், திக்குறிச்சி, சிதறால், பரக்காணி உட்பட ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிப்போருக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது

Views: - 253

0

0