கொரோனா தடுப்பு பணியில் மீண்டும் மாபெரும் பங்களிப்பு : முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கிய சிசிசிஏ..!!!

13 May 2021, 7:47 pm
CCA - updatenews360
Quick Share

கோவை : கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஒப்பந்ததாரர் நல சங்கம் சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது.

கொரோனா நோய் பாதிப்பு பரவல் இரண்டாவது அலையாக உருமாறி அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக அதிக பாதிப்புகள் கோவையில் பதிவாகி வருகிறது. இந்தக் கொரோனா தொற்றினாலும், இதனை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கினாலும் ஏழை, எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே, கொரோனா தடுப்பு பணிகளுக்கு பொதுமக்கள், நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் முடிந்த உதவிகளை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கலாம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அண்மையில் அறிவித்திருந்திருந்தார்.

இந்த நிலையில், கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அமைச்சர்களிடம் முதல்வர் நிவாரண நிதிக்காக 10 லட்ச ரூபாய்க்கான காசோலையை ஒப்பந்ததாரர் நல சங்க தலைவர் உதயகுமார், பொருளாளர் அம்மாசையப்பன் ஆகியோர் வழங்கினர்.

கடந்த ஆண்டில் கொரோனா முதல் அலை தாக்கத்தின் போது ஒப்பந்ததாரர் நல சங்கம் சார்பில் 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவித் தொகையாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஒப்பந்ததாரர் சங்கம் சார்பில் கொரோனா நோய் காரணமாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு உதவி செய்யவும், அரசு மருத்துவமனை மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தேவையான வசதிகள் செய்து தரவும் திட்டமிடப்பட்டுள்ளது.‌ ஏழை, எளிய மக்களுக்கு மாஸ்க், சானிடைசர் மற்றும் நோய் தொற்று பாதிப்பு உள்ளவர்களுக்கு ரெம்டெசிவர் மருந்துகள் பெற தேவையான உதவிகள் செய்யவும் ஒப்பந்ததாரர்கள் சங்கம் திட்டமிட்டுள்ளது.

Views: - 185

0

0