இந்தியாவில் மற்ற சங்கங்களுக்கு முன் மாதிரியானது ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் : சங்கச் செயலாளர் பெருமிதம்!!

16 April 2021, 1:42 pm
Cbe Corp cont Association 1 -Updatenews360
Quick Share

கோவை : ஜி.எஸ்.டி நடமுறைப்படுத்திய போது ஒப்பந்ததாரகளுக்கு 12 சதவீதம் திருப்பி வழங்க வழக்கு தொடுத்து வெற்றி கண்டதன் மூலம் ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் இந்தியாவிற்கே முன்மாதிரி சங்கமாக விளங்குவதாக அச்சங்கத்தின் செயலாளர் சந்திரபிரகாஷ் தெரிவித்துள்ளார்.

ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தின் நிர்வாகிகள் பதவியேற்பு விழா கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சங்கத்தின் தலைவராக உதயகுமார் பொறுப்பேற்றுக்கொண்டார். செயலாளராக சந்திரபிரகாஷ், பொருளாளராக அம்மாசையப்பன், துணை தலைவர்களாக மைக்கேல், ராஜகோபால், துணை பொருளாளராக செல்வராஜ் மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக மனோஜ்குமார், கார்த்தி, செந்தில்பிரபு, சசிகுமார், குருவாயூரப்பன், சுந்தரம், இளங்கோ, இளங்கோ, பாலமுருகன், செல்வராஜ், தாமஸ் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

சங்கத்தின் தலைவர் உதயகுமார் வரவேற்புரை வழங்கினார். அப்போது பேசுகையில், “26வது ஆண்டுவிழாவும், சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்பு நிகழ்வும் ஒரு சேர நடைபெறுகின்றது. இந்த விழாவிற்கு வந்த அனைவரையும் வரவேற்கிறேன்.” என்றார்.

செயலாளர் சந்திரபிரகாஷ் அறிக்கையை தாக்கல் செய்தார். அப்போது பேசியதாவது: 6வது முறையாக சங்கத்தின் செயலாளராக இருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கடந்த காலங்களில் பல நலத்திட்டங்களை செய்துள்ளோம்.

ஒப்பந்ததாரர்கள் அனைவருக்கும் ரூ.10 லட்சத்திற்கு குழு காப்பீடு செய்யப்படுகிறது.சங்கத்திற்கான அலுவலகம் ரேஸ்கோர்ஸ்-க்கு மிக அருகில் உள்ளதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். எந்த சங்கமும் செய்யாத அளவு திடக்கழிவு மேலாண்மையில் சிறப்பாக செயல்பட்டு கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளோம்.

ஜி.எஸ்.டி அமல்படுத்திய போது பலர் சிரமப்பட்டனர். இருந்த போதும் இதனை லாவகமாக கையாள்வது குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசித்து ஒப்பந்ததாரர்களுக்கும், மா நகராட்சிக்கும் சுமார் ரூ.30 கோடி லாபம் ஈட்டிக் கொடுத்தோம்.

ஜி.எஸ்.டி நடைமுறைப்படுத்திய போது கூடுதலாக வழங்க வழக்கு தொடுத்தோம். ஒப்பந்ததாரர்களுக்கு 12 சதவீதம் சேர்த்து வழங்க உத்தரவிட்டது. இந்தியாவில் உள்ள மற்ற சங்கங்களுக்கு முன்மாதிரியாக இருந்தது இந்த சங்கம்.

கண் மற்றும் பல் மருத்துவ சிகிச்சை இலவசமாக வழங்கினோம் அதோடு, குழந்தைளுக்கு இலவச கண்ணாடிகள் வழங்கப்பட்டது. பல ஆயிரக்கணக்கான மரங்கள் நடவு செய்துள்ளோம்.

கொரோனா பேரிடர் நிதியாக ரூ.10 லட்சம், வர்தா புயல் நிவாரண நிதியாக ரூ.7 லட்சமும், சென்னை வெள்ளப்பெருக்கின் போது ரூ. 10 லட்சமும், கேரளா வெள்ள நிவாரணத்திற்கு ரூ 20 லட்சம் மதிப்பிலான பொருட்களையும் வழங்கியுள்ளோம்.

சிமெண்ட் ஆலைகள் கூட்டு சேர்ந்த அதிரடி விலையேற்றம் செய்தன. பெரிய நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்காத போதிலும், சங்கம் மூலம் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தோம். அதன்படி 10 முதல் 20 சதவீதம் விலை குறைக்கப்பட்டுள்ளது.

ஸ்டீல் விலையேற்றத்தை தொடர்ந்து வழக்கு தொடர்ந்தோம், மேலும் சி.பி.ஐ விசாரணைக்கு கோரிக்கை வைத்தோம் தற்போது சி.பி.ஐ விசாரணை தமிழகத்தில் நடைபெற உள்ளது. இதனை வெற்றியாக பார்க்கிறோம்.

வேகமாக முடிக்கும் பணிகளுக்கு 1 சதவீத போனஸ் வழங்க கோரிக்கை வைத்தோம். அது நிறைவேறியுள்ளது. கடந்த ஆண்டுகளில் சடங்கம் திறம்பட செயல்பட உதவியவர்களுக்கு நன்றிகள். இவ்வாறு அவர் பேசினார்.

இதனை தொடர்ந்து சங்க கூட்டங்களுக்கு அதிக முறை வருகை சந்த சங்க உறுப்பினர்களுக்கு கேடயங்களும், நிதி ஆதாரங்களை பெருக்க உதவி செய்தவர்களுக்கு 50 கிராம் வெள்ளி நாணயம் மற்றும் நினைவு பரிசுகளும், செயற்குழு உறுப்பினர்களுக்கு பாராட்டுகளும், பட்டயங்களும் வழங்கப்பட்டன.

Views: - 35

0

0