கோவையில் காங்கிரஸ் செயல் தலைவர் செய்த காரியம் : தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றியதால் சர்ச்சை!!

Author: Udayachandran RadhaKrishnan
15 August 2021, 6:19 pm
Flag - Updatenews360
Quick Share

கோவை : 75வது சுதந்திரன தின விழாவில் தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றிய கோவை காங்கிரஸ் கட்சியினர் செயலால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இன்று 75வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் அரசு அலுவலகங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தங்கள் அலுவலகங்களில் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர்.

அதன் ஒரு பகுதியபாக கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் சார்பில் சுதந்திர தின விழா பேரண நடைபெற்றது. கோவை தாசில்தார் அலுவலகத்தில் தொடங்கி காங்கிரஸ் அலுவலகம் வரை பேரணி முடிவடைந்தது.

பின்னர் கோவையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் தேசியக் கொடியை தலைகீழா ஏற்றியதால் சர்ச்சையானது.

கொடிக்கம்பத்தல் முக்கால் பகுதி செல்லும் போது தேசிய கொடி தலைகீழாக இருந்ததை பார்த்த மயூரா ஜெயக்குமார் கொடியை கம்பத்தில் இருந்து இறக்கி சரி செய்து மறுபடியும் ஏற்றினார்.

Views: - 288

0

0