“நேரில் பார்த்தால் அப்படி இருக்காதே.” சிவகார்த்திகேயன் முன்னாடியா சிவாங்கி இப்படி பேசனும்..!

Author: Rajesh
15 May 2022, 3:13 pm
Quick Share

சமையல் நிகழ்ச்சியை அதிகம் காமெடியாக மாற்றி ரசிகர்களை கவர்ந்து வரும் குக் வித் கோமாளி ஷோவுக்கு தற்போது மிக அதிக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

நேற்று ஒளிபரப்பான எபிசோடில் நடிகர் சிவகார்த்திகேயன் டான் பட ப்ரோமோஷனுக்காக குக் வித் டகோமாளி செட்டுக்கு வந்து இருந்தார். அவர் வந்ததும் குக் மற்றும் கோமாளி என எல்லாருமே குதூகலம் ஆனார்கள்.

‘நான் இந்த சீசனையும் பார்த்து வருகிறேன். பலரும் எனக்கு தெரிந்தவர்கள் தான். தெரியாதவர்களும் ஷோ பார்க்கும்போது எனக்கு பிடிக்கிறது.’

‘கடந்த முறை நான் இங்கே வந்த போது அதிக நேரம் இருக்க முடியவில்லை. அதனால் இந்த முறை அதிகம் நேரம் இருக்கும் வகையில் வந்திருக்கிறேன். ஷோவை லைவ்வில் பார்க்க அதிகம் ஆர்வமாக இருக்கிறேன்’ என சிவகார்த்திகேயன் கூறினார்.

‘நேரில் பார்த்தால் அப்படி இருக்காதே.. எல்லாமே எடிட்டிங்’ என சிவாங்கி கூறி விஜய் டிவியையே கலாய்த்து விட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் சிவகார்த்திகேயன் முன்னாடியா சிவாங்கி இப்படி விஜய் டிவியை கலாய்த்து பேசனும் என கூறி வருகின்றனர்.

Views: - 604

7

1