புதுப்பொலிவுடன் குன்னூர் பேருந்து நிலையம்.! பழங்குடியினரின் பழங்கால ஓவியங்கள்.!!
9 August 2020, 11:18 amநீலகிரி : குரும்பர் பழங்குடியின மக்களின் ஓவியங்களால் குன்னூர் பேருந்து நிலையம் புது பொலிவுடன் காணப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவால் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் காற்று மாசுபாடு, சாலை விபத்து போன்றவை குறைந்துள்ளது. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொது இடங்களை நகராட்சி அதிகாரிகள் சுத்திகரிப்பு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குன்னூர் பேருந்து நிலையம் தற்போது தூய்மை செய்யப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் குரும்பர் இன மக்களின் வாழ்வியலில் ஒன்றாக பாறை ஓவியங்கள் உள்ளது. குரும்பர் பழங்குடியின மக்கள் இந்த கலையை பல தலைமுறையாக வழக்கத்தில் வைத்துள்ளனர்.
தற்போது இவர்களை கொண்டு பேருந்து நிலையத்தில் பழங்கால பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறை, இசைக்கருவிகள், மேய்ச்சல் நிலம் போன்றவை ஓவியமாக வரையப்பட்டு வருகிறது. இதனால் பழங்குடியின மக்களுக்கு வனப்பகுதிகள் மட்டுமின்றி நகர் பகுதியிலும் சிறப்பு அங்கீகாரம் கிடைத்து வருகிறது. இவர்கள் வரையும் ஓவியம் பார்ப்போர் மனதை கொள்ளையடிப்பதுடன் பழங்கால நினைவுகளை கொண்டு வருவதாக பொது மக்கள் தெரிவித்து வருகின்றனர்.