டிரான்ஸ்பார்மரை கீழே தள்ளிவிட்டு காப்பர் திருட்டு : பலே கும்பலுக்கு போலீஸ் வலை!!

21 November 2020, 9:14 am
Copper Theft - Updatenews360
Quick Share

கோவை: சூலூர் அருகே உள்ள அரசூர் பகுதியிலிருந்து பெத்தாம்பாளையம் செல்லும் பாதையில் உள்ள டிரான்ஸ்பார்ம ரை கீழே தள்ளிவிட்டு அதிலிருந்த காப்பர் வயர்களை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அரசூர் பகுதியிலிருந்து பெத்தாம்பாளையம் செல்லும் பாதையில் ஒரு இன்ஜினியரிங் தொழிற்சாலை உள்ளது.இந்த தொழிற்சாலைக்கு தனியாக மின் பாதை அமைக்கப்பட்டு மின்சாரம் சென்றுகொண்டிருந்தது .

தொழிற்சாலை கடந்த ஆறு மாதங்களாக செயல்படுவது இல்லை. தொழிற்சாலை அருகே மின்மாற்றி எனப்படும் டிரான்ஸ்பார்மர் பொருத்தப்பட்டு இருந்தது. ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இந்த ட்ரான்ஸ்ஃபார்மர் அமைந்திருந்தது.

நேற்று இரவு மர்ம நபர்கள் அந்த ட்ரான்ஸ்பார்மர்க்கு செல்லும் மின் இணைப்பை துண்டித்து விட்டு டிரான்ஸ்பார்மரை கீழே தள்ளி அதிலிருந்த காப்பர் வயர்களை திருடி சென்றுள்ளனர்.

இன்று காலை இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அரசூர் மின்சார வாரியத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற மின்வாரிய அதிகாரிகள் டிரான்ஸ்பார்மர் கீழே தள்ளப்பட்டு அதிலிருந்த காப்பர் வயர்கள் திருடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுதொடர்பாக அரசூர் மின்வாரிய இளநிலை பொறியாளர் சுரேஷ்குமார் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சூலூர் போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயர் அழுத்த மின்சாரம் செல்லும் மின் பாதையில் உள்ள டிரான்ஸ்பார்மரிலேயே காப்பர் ஒயர் திருடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Views: - 23

0

0