கோவையில் மகளிர் போலீசார் நடத்திய கொரோனா விழிப்புணர்வு பேரணி!!

7 November 2020, 11:02 am
Corona Rally - Updatenews360
Quick Share

கோவை : கோவையில் சிறைத்துறை மகளிர் போலீசார் கொரோனா விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

சிறைத்துறை போலீசார் தொடர்ந்து கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த வாரம் சிறைத்துறை மைதானத்தில் தொடங்கி இருசக்கர வாகன பேரணி நடத்தப்பட்ட நிலையில் ,இன்று சிறைத்துறை மகளிர் போலீசார் கொரோனா விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியை நடத்தினர்.

இந்த பேரணியை சிறைத்துறை டி.ஐ.ஜி சண்முகசுந்தரம் கொடியசைத்து துவங்கி வைத்தார். காந்திபுரம் மத்திய சிறை மைதானத்தில் தொடங்கிய இந்த பேரணி நஞ்சப்பா சாலை வழியாக சென்று சிறை வளாகம் முன்பு வரை சென்றது.

பேரணியின் ஒருபகுதியாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முக கவசம் மற்றும் சானிடைசர்கள் வழங்கப்பட்டன.

Views: - 29

0

0