கோவை கொடிசியாவில் 450 படுக்கைகளுடன் கொரோனா மையம் தயார் : சுகாதாரத்துறை தகவல்!!

13 April 2021, 7:27 pm
Corona Codissia Bed -Updatenews360
Quick Share

கோவை : கொடிசியா தொழில் வளாகத்தில் 450 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் தயார் நிலையில் உள்ளதாக சுகாதரத்துறை தெரிவித்துள்ளது.

கோவையில் அதிகரித்து வரும் இரண்டாம் கட்ட கொரோனா பரவலை கட்டுப்படுத்த, கூடுதலாக சிறப்பு சிகிச்சை மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக கோவை கொடிசியா தொழில் வளாகத்தில் சுமார் 450 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது.

அதில் பெண்களுக்கு மட்டும் தனியாக 80 படுக்கை வசதிகளுடன் தனி வார்டுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

தொற்று பரவல் அதிகரித்து வருவதால் இரண்டு நாட்களுக்குள் 450 படுக்கை வசதிகளுடன் கூடிய சிகிச்சை மையம் தயார் நிலையில் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் நோயாளிகளுக்கு தேவையான கழிவறை, உடை மாற்றும் இடம் என தனி அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

Views: - 56

0

0