கோவையில் இன்று 3,390 பேருக்கு கொரோனா உறுதி : 3 பேர் உயிரிழப்பு

Author: kavin kumar
20 January 2022, 8:22 pm
Quick Share

கோவை: கோவை மாவட்டத்தில் இன்று 3390 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான மாநில சுகாதாரத் துறையின் அறிக்கை வெளியாகியுள்ளது, அதன்படி கோவை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 390 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், தொற்று பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பலனின்றி இன்று மூன்று பேர் உயிரிழந்தனர். தற்போது 15 ஆயிரத்து 926 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொற்று பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 1189 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 75 ஆயிரத்து 530 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது, இதுவரை 2540 பேர் உயிரிழந்து உள்ளது. குறிப்பிடத்தக்கது.

Views: - 233

0

0