கோவையில் இன்று 149 பேருக்கு கொரோனா உறுதி : 179 பேர் டிஸ்சார்ஜ்

25 November 2020, 7:40 pm
Corona Cbe - Updatenews360
Quick Share

கோவை: கோவை மாவட்டத்தில் இன்று புதிதாக 149 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறை இன்று வெளியிட்ட பட்டியிலில் கோவையில் 149 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 975 ஆக உயர்ந்துள்ளது. தவிர கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 76, 70 வயது முதியவர்கள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.

இதன் மூலம் கோவையில் கொரோனா நோய்த் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 603 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 179 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர். கோவையில் இதுவரை 46 ஆயிரத்து 693 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 679 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Views: - 0

0

0