சென்னையை மீண்டும் முந்தியது கோவை: தமிழகத்தில் மேலும் 736 பேருக்கு கொரோனா உறுதி

Author: Udhayakumar Raman
28 November 2021, 8:20 pm
TN Corona -Updatenews360
Quick Share

சென்னை: தமிழகத்தில் மேலும் 736 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேலும் 736 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 27,25,467ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 772 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 26,80,667 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 09 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 36,463 ஆக உயர்ந்துள்ளது. சென்னையை பொறுத்தவரையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக, இன்று கோவையில் 109 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, சென்னையில் 107 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 105 ஆக இருந்த நிலையில் இன்று 107 ஆக அதிகரித்துள்ளது.

Views: - 180

0

0