“அழகை ரசிக்க யாரும் இல்லை“ : ஏக்கத்தில் ரோஜா.!!

22 May 2020, 6:42 pm
Kodai Rose -Updatenews360
Quick Share

திண்டுக்கல் : கொடைக்கானலில் உள்ள ரோஜா தோட்டத்தில் வண்ண வண்ண கலர்களில் பூத்துக்குலுங்கும் ரோஜா மலர்களே பார்த்து ரசிக்க சுற்றுலாப் பயணி யாரும் இல்லாததால் வெறிச்சோடி காணப்படுகிறது.

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் அப்சர்வேட்டரி பகுதியில் தோட்டக்கலை துறைக்கு சொந்தமான ரோஜா தோட்டம் அமைந்துள்ளது .

இந்நிலையில் கொரோனா ஏற்படுத்திய பாதிப்பின் காரணமாக கொடைக்கானலில் சுற்றுலா தொழில்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகள் வருகை இன்றி சுற்றுலா தலங்களும் வெறிசோடியே காணப்படுகிறது. தொடர்ந்து ரோஜா தோட்டத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பூக்கள் அதிக அளவில் போது குலுங்குகிறது.

பல்வேறு வண்ணங்களில் கண்ணை வியக்கும் விதத்தில் பல ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ரோஜா மலர்களை காண சுற்றுலாப்பயணிகள் வருகை இன்றி ரசிக்க ஆள் இல்லாமல் வெறிசோடி காணப்படுகிறது. சுற்றுலாப்பயணிகள் வ அருகை இன்றி மக்கள் ஏமாறுவதுடன் ரோஜா மலர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளது.