கோவையில் 30 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு : இதுவரை டிஸ்சார்ஜ் எத்தனை பேர் தெரியுமா?

27 September 2020, 9:01 pm
corona Cbe -Updatnews360
Quick Share

கோவை: கோவையில் இன்று புதிதாக 596 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் என்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் இன்று 500க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், சூலூர், துடியலூர், குனியமுத்தூர், உக்கடம், பீளமேடு, ராமநாதபுரம், வெள்ளக்கிணர், விளாங்குறிச்சி, காந்திபுரம், காரமடை, ரத்தினபுரி, கணபதி, சரவணம்பட்டி, அன்னூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 596 பேருக்கு இன்று கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 314 ஆக உயர்ந்துள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 63, 70 வயது முதியவர்கள், 65, 85 வயது மூதாட்டிகள், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 68 வயது மூதாட்டி ஆகிய 5 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். கோவையில் இதுவரை 418 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். கோவையில் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 472 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர். கோவையில் இதுவரை 25 ஆயிரத்து 915 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 4 ஆயிரத்து 981 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Views: - 0

0

0