உஷார்..!! கோவையில் ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு..!

Author: kavin kumar
13 January 2022, 6:51 pm
corona - updatenews360
Quick Share

கோவை: கோவை மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு இன்று ஆயிரத்தை கடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா மூன்றாம் அலை வேகமாக பரவி வருகிறது. நேற்று 981 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.அதன்படி கோவை மாவட்டத்தில் இன்று 1162 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 5190 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று ஒரே நாளில் 293 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 59 ஆயிரத்து 580 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது, இதுவரை 2528 பேர் உயிரிழந்து உள்ளனர். இன்று உயிர் இழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 245

0

0