தமிழகத்தில் 30 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு : இன்றைய முழு நிலவரம்!!

12 May 2021, 8:00 pm
Corona TN - Updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,000-ஐ தாண்டியது.

கொரோனாவின் 2வது அலை பரவத் தொடங்கியதால் பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இன்று 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகியுள்ளது.

அதாவது, 30,336 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,68,864ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக, சென்னையில் இன்று 7,564 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டுவில் 2,670 பேருக்கும், கோவையில் 2,636 பேருக்கும், திருவள்ளூரில் 1,344 பேருக்கும், மதுரையில் 1,172 பேருக்கும் உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று 293 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,471 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 19,508 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12 லட்சத்து 79 ஆயிரத்து 658 ஆக அதிகரித்துள்ளது.

Views: - 128

0

0