தமிழகத்தில் 30,500ஐ தாண்டிய கொரோனா பலி எண்ணிக்கை : இன்றைய முழு நிலவரம்!!

17 June 2021, 7:32 pm
Delhi Corona- Updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,000க்கு கீழ் குறைந்துள்ளது.

கொரோனாவின் 2வது அலை பரவத் தொடங்கியதால் பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்தது. ஆனால், கடந்த 27 தினங்களாக குறைந்து வருகிறது.

இந்த நிலையில், இன்று 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகியுள்ளது. அதாவது, 9,115 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,97,864 ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக, கோவையில் இன்று 1,227 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 559 பேருக்கும், திருப்பூரில் 542 பேருக்கும், ஈரோட்டில் 1,041 பேருக்கும், சேலத்தில் 598 பேருக்கும் உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று 210 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30,548 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 22,720 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 22 லட்சத்து 66 ஆயிரத்து 793 ஆக அதிகரித்துள்ளது.

Views: - 112

0

0