கோவை, சேலம் மாவட்டத்தில் அதிகரித்த கொரோனா : மாவட்ட வாரியாக நிலவரம்!

27 September 2020, 6:49 pm
Corona Cbe - Updatenews360
Quick Share

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் இன்று ஒரே நாளில் 5,791 பேர் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

தமிழக சுகாதாரத்துறையின் அறிக்கையின்படி தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,791 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அதன் மூலம் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 80 ஆயிரத்து 808 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று 1280 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதன் மூலம் சென்னையில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 63 ஆயிரத்து 423 ஆக உள்ளது. சென்னை நீங்கலாக மற்ற மவாட்டங்களில் இன்று பாதிப்பு அதிகமாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 80 பேர் பலியாகியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 9,313 ஆக அதிகரித்துள்ளது. அதே போல இன்று ஒரே நாளில் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 5 ஆயிரத்து 706 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

திருவள்ளூரில் இன்று 202 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 296 பேருக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரையில் 82 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 196 பேருக்கும் , கோவையில் 596 பேருக்கும், திருப்பூரில் 282 பேருக்கும், கடலூரில் 256 பேருக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் 144 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 26 பேருக்கும், ஈரோடு மாவட்டத்தில் 125 பேருக்கும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 92 பேருக்கும், திண்டுக்கல் மாவட்டத்தில் 39 பேருக்கும், தேனியில் 76 , திருவண்ணாமலை மாவட்டத்தில் 72 பேருக்கும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 190 பேருக்கும், சேலம் மாவட்டத்தில் 378 பேருக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 75 பேருக்கும், நாகை மாவட்டத்தில் 41 பேருக்கும், நீலகிரியில் 161 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.