தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா : தனிமைப்படுத்தப்பட்ட சக மாணவிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 September 2021, 11:46 am
Student Corona - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : தனியார் பள்ளியில் பயின்று வரும் 11ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா உறுதியானதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.

கடந்த 1ஆம் தேதி முதல் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட்டு நடந்து வருகிறது. இதற்கிடையே திண்டுக்கல் கோட்டாட்சியர் அலுவலகம் சாலையிலுள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 11வது வகுப்பு பயின்று வரும் மாணவி ஒருவருக்கு கொரானா தொற்று உறுதியானதை தொடர்ந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வகுப்பறையில் உடன் அமர்ந்திருந்த 17 மாணவிகள் மற்றும் மூன்று ஆசிரியருகளுக்கு கொரானா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் இன்று வெளியாகும் என தெரிகிறது இதனைத்தொடர்ந்து மாணவிகள் ஆசிரியர்கள் அனைவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

தொற்று பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தைக்கு வைரஸ் தொற்று இருந்த காரணத்தினால் மாணவிக்கும் பரவியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Views: - 312

0

0