திருச்சி விமான நிலையம் வந்த 14 பேருக்கு கொரோனா : ஒமிக்ரான் பாதிப்பா…?

Author: kavin kumar
16 January 2022, 2:16 pm
Quick Share

திருச்சி : சார்ஜாவில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் வந்த 14 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, அவர்கள் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு துபாய், சார்ஜா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து தினந்தோறும் நூற்றுக்கு மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு விமானம் வந்து செல்கின்றது. அப்படி வரும் விமான பயணிகள் அனைவருக்கும் ஆர்டிபிசியா சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். அதன்படி நேற்று திருச்சிக்கு துபாய் மற்றும் சார்ஜாவில் இருந்து விமானத்தில் வந்த நூற்றுக்கு மேற்பட்ட பயணிகளை கொரோனா சோதனை மேற்கொண்டனர். இதில் 14 பேர் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக அவர்கள் திருச்சியில் உள்ள பல்வேறு தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அவர்களுடைய மாதிரி எடுத்து ஒமிக்ரான் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Views: - 279

0

0