கோவையில் இன்று 393 பேருக்கு கொரோனா..! : 6 பேர் உயிரிழப்பு

Author: Udayaraman
12 October 2020, 6:40 pm
Cbe corona - Updatenews360
Quick Share

கோவை: கோவையில் இன்று 393 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 511ஆக அதிகரித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் மாத்தில் உச்சத்தில் இருந்த கொரோனா நோய்த் தொற்று பரவல் அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து குறைந்து வருகிறது. இன்று சுகாதாரத் துறை வெளியிட்ட பட்டியலின் படி, கோவையில் வெவ்வேறு பகுதிகளை சேர்ந்த 393 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 511 ஆக உயர்ந்துள்ளது.

கோவை அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 6 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இதன்மூலம் கோவையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 497 ஆக உயர்ந்துள்ளது. கோவையில் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 466 பேர் குணமைடந்து இன்று வீடு திரும்பினர். கோவையில் இதுவரை 32 ஆயிரத்து 175 போர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 4 ஆயிரத்து 839 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Views: - 28

0

0