ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா : தடுப்பு கம்பி போட்டு தெருவை மூடிய நகராட்சி!!

14 May 2021, 4:22 pm
Corona 4- Updatenews360
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலத்தில் ஒரே பகுதியில் இன்று நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அப்பகுதி முழுவதும் மூடப்பட்டது.

தமிழகமெங்கும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இதனை தடுக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள கோவிந்தராஜபுரம் பகுதியில் ஒரே குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த இன்று நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இதன் காரணமாக‌ கொரோனா தொற்று ஏற்பட்ட 4 நபர்களும் அவர்கள் வீட்டிலேயே தனிமை படுத்தப்பட்டு அப்பகுதி முழுவதையும் தடுப்பு கம்பிகள் கொண்டு நகராட்சி நிர்வாகத்தினர் சார்பில் மூடப்பட்டது.

Views: - 115

0

0