கோவையில் 587 பேருக்கு கொரோனா : 512 பேர் டிஸ்சார்ஜ்.!

23 September 2020, 9:57 pm
Quick Share

கோவை: கோவை மாவட்டத்தில் இன்று 587 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவாகக நேற்று முன்தினம் ஒரே நாளில் 648 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று 595 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்றும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 500 ஐ கடந்துள்ளது. அதன்படி, கோவையில் இன்று ஒரே நாளில் 587 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 744ஆக அதிகரித்துள்ளது.

மேலும், இன்று 4 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, பலியானவர்கள் எண்ணிக்கை 396ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 512 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கோவையில் இதுவரை 22 ஆயிரத்து 718 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி கோவையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 4 ஆயிரத்து 630 பேர் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.