கோவையில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் உட்பட 595 பேருக்கு கொரோனா : 507 பேர் டிஸ்சார்ஜ்.!

22 September 2020, 7:43 pm
Quick Share

கோவை: கோவை தொப்பம்பட்டியில் அமைந்துள்ள மத்திய பாதுகாப்பு படை முகாம் வீரர்கள் இருவர் உட்பட 595 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவாகக நேற்று ஒரே நாளில் 648 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த சூழலில், இன்று பாதிக்கப்பட்டோர் 595 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. கோவை தொப்பம்பட்டி பகுதியில் அமைந்துள்ள மத்திய பாதுகாப்பு படை முகாம் வீரர்கள் இருவர், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த இரண்டு காவலர்கள் மற்றும் வருமான வரித்துறை அலுவலக குடியிருப்பில் வசிக்கும் 43வயது பெண் ஆகியோருக்கு என மொத்தம் 595 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 157ஆக அதிகரித்துள்ளது. மேலும், இன்று 4 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, பலியானவர்கள் எண்ணிக்கை 392ஆக அதிகரித்துள்ளது.இன்று ஒரே நாளில் 507 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கோவையில் இதுவரை 22 ஆயிரத்து 206 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி கோவையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 4 ஆயிரத்து 559 பேர் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 5

0

0