கோவையில் இன்று மேலும் 389 பேருக்கு கொரோனா

22 August 2020, 8:54 pm
Quick Share

கோவை: கோவை மாவட்டத்தில் இன்று மேலும் 389 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் இன்று மேலும் 389 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவையில் மொத்த பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11,358 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று சிகிச்சை பலனின்றி இன்று மேலும் 4 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் கோவை மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 235 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வந்த 312 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் கோவையில் இதுவரை கொரோனா தொற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,972 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 3,151 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 1

0

0