கேரள மாணவர்கள் வருகையால் கோவை மாணவர்களுக்கு கொரோனா: மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தால் அதிகரிக்கும் அச்சம்..!!

By: S
15 September 2021, 4:41 pm
Quick Share

கோவை: கேரளாவிலிருந்து கல்வி பயில கோவை வரும் மாணவர்களை மாவட்ட நிர்வாகம் முறையாக கண்காணிக்காத காரணத்தினால் கோவையில் உள்ள மற்ற மாணவர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் கேரள மாநிலத்தின் அருகே இருப்பதால், கேரள மாணவர்கள் கல்லூரி படிப்பை தொடர கோவையில் உள்ள பல்வேறு கல்லூரிகளுக்கு வருகின்றனர். பலரும் இங்குள்ள கல்லூரி விடுதிகள் மற்றும் தனியார் விடுதிகளில் தங்கி பயின்று வருகின்றனர்.

கோவை மாவட்டத்துக்கு நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள்: அதிகரிக்கும்  தொற்றால் ஆட்சியர் உத்தரவு | Corona; Additional Restrictions-Collector Order  for Coimbatore District ...

கேரள மாநிலத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் நிபா வைரஸ் அச்சுறுத்தலும் அம்மாநிலத்தில் உள்ளது. இதனால் இங்கு கல்வி பயில வரும் மாணவர்கள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று அறுவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு கோவை வரும் மாணவர்களுக்கு காய்ச்சல், சளி பாதிப்பு உள்ளதா என்பதை மாவட்ட நிர்வாகம் முறையாக கண்காணிக்காமல் அலட்சியப்போக்குடன் செயல்பட்டு வருகிறது.

இதனிடையே சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் ஏராளமான கேரள மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களில் 4 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த மாணவர்களுடன் தொடர்பில் இருந்த மற்ற மாணவர்களுக்கும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது கேரள மாணவர்களுடன் தொடர்பில் இருந்த மொத்தம் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.

சென்னை, கோவை, ஈரோட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்று.. கவனம் மக்களே! |  Increasing covid cases in Chennai, Coimbatore and Erode: Awareness is  essential - Tamil Oneindia

இதனை தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் கல்லூரி வளாகத்திலேயே செயல்பட்டு வரும் கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், அவ்வளாகத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உள்ளதா? என்பதை கண்டறிய ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மற்ற வயதினரை காட்டிலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஒருவருடன் ஒருவர் நெருங்கி அமர்ந்து படிக்கும் சூழல் உள்ளது. இதனிடையே கேரளாவில் இருந்து கல்லூரிக்கு வரும் மாணவர்கள் கட்டாயம் 10 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதை கல்லூரி நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தற்போது அறிவுறுத்தி வருகின்றனர். தொற்று பாதிப்பு அதிகமாகவும், புதிய வைரஸ் தொற்றின் அச்சமும் உள்ள ஒரு மாநிலத்தில் இருந்து இங்கு வருவோரை முறையாக கண்காணிப்பதை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் கோட்டை விட்டுள்ளன.

ஷாக்..! கோவையில் மீண்டும் 200 கடந்த தினசரி பாதிப்பு.. தமிழ்நாட்டில் இன்று  1562 பேருக்கு கொரோனா.. | Tamilnadu daily Corona update 1562 tested positive  for Corona with 200 plus cases ...

இதன் விளைவாக ஏராளமானவர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. ஏற்கனவே கோவையில் அதிகரித்திருக்கும் கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், அதிகாரிகளின் அலட்சியத்தால் மீண்டும் தொற்று எண்ணிக்கை உயர்வதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. இதனால் சக மாணவர்கள் மற்றும் பெற்றோர் பீதியடைந்துள்ளனர்.

கோவை: 9-ம் வகுப்பு மாணவர்கள் மூவருக்கு கொரோனா உறுதி! - 3 நாள்களுக்குப்  பள்ளியை மூட உத்தரவு | 9 students tested positive for corona in Coimbatore

எனவே கொரோனா விஷயத்தில் “குறைட்டை” விடுவதை விட்டுவிட்டு அதிகாரிகள் களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பள்ளி மாணவர்களை பொறுத்தவரை ஏற்கனவே மாவட்டத்தில் 10 மாணவர்களுக்கும் ஆசிரியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இந்த நிலையில் இன்று இருகூர் மற்றும் சோமனூரில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 92

0

0