எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு கொரோனா? மாவட்ட வாரியான முழு நிலவரம்!!

12 December 2020, 7:39 pm
Cbe Corona - Updatenews360
Quick Share

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஏறி, இறங்கி வரும் நிலையில், மாவட்ட வாரியான பாதிப்பு விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இன்று 1,218 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,97,693 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மாவட்ட வாரியான நிலவரத்தை காணலாம் : திருவள்ளூரில் இன்று 72 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 72 பேருக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரையில் 38 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 41 பேருக்கும் , கோவையில் 120 பேருக்கும், திருப்பூரில் 65 பேருக்கும், கடலூரில் 14 பேருக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் 10 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒருவருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 41 பேருக்கும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 19 பேருக்கும், திண்டுக்கல் மாவட்டத்தில் 28 பேருக்கும், தேனியில் 13, திருவண்ணாமலை மாவட்டத்தில் 9 பேருக்கும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 12 பேருக்கும், சேலம் மாவட்டத்தில் 40 பேருக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 15 பேருக்கும், நாகை மாவட்டத்தில் 18 பேருக்கும், நீலகிரியில் 15 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

Views: - 1

0

0