கோவையில் இன்று பள்ளி மாணவர்கள் மூவருக்கு கொரோனா.!

By: Udayaraman
15 September 2021, 8:49 pm
Quick Share

கோவை: கோவையில் இன்று மேலும் பள்ளி மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்த காலகட்டத்திலேயே பள்ளி கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனால் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை 10 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியருக்கு பாதிப்புக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று இருகூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவிக்கும், நீலிகோணம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் 2 மாணவர்களுக்கும், சோமனூர் தனியார் பள்ளியில் படிக்கும் 12ம் வகுப்பு மாணவி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி கோவையில் இதுவரை 13 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே சரவணம்பட்டி தனியார் நர்சிங் கல்லூரியில் 46 மாணவர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதன்படி கோவையில் இதுவரை 13 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே சரவனம்பட்டி தனியார் நர்சிங் கல்லூரியில் 46 மாணவர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 115

0

0