கோவையில் 3 மாணவர்களுக்கு கொரோனா: அரசு பள்ளி மூடல்..அதிர்ச்சியில் பெற்றோர், மாணவர்கள்.!!

Author: Aarthi Sivakumar
6 September 2021, 2:21 pm
Quick Share

கோவை: சூலூர் அருகே சுல்தான் பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளி 9ம் வகுப்பு மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று குறைந்த நிலையில் தமிழகம் முழுவதும் கடந்த 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. 9,10,11,12 மாணவர்களுக்கு வகுப்புகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு சுழற்சி முறையில் கொரோனா சோதனையானது நடத்தப்பட்டு வருகின்றது.

அதன்படி கோவை மாவட்டம் சுல்தான்பேட்டையில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் கொரோனா சோதனை நடத்தப்பட்டதில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 3 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர்கள் 3 பேரும் சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சுல்தான் பேட்டை அரசு உயர் நிலைப்பள்ளியில் 33 மாணவர்களுக்கு சோதனை செய்ததில் மூன்று மாணவர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது தெரியவந்தது. மேலும் 3 மாணவர்களுடன் தொடர்பில் இருந்த மற்ற மாணவர்களுக்கு சுகாதாரத்துறையினர் இன்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர்.

Views: - 367

0

0