கோவையில் இன்று 190 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

12 November 2020, 8:34 pm
Corona Cbe - Updatenews360
Quick Share

கோவை: கோவை மாவட்டத்தில் இன்று புதிதாக 190 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறையினர் இன்று வெளியிட்ட பட்டியலில் கோவையில் ஊரகம், நகர்ப்புற பகுதிகளை சேர்ந்த 190 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்து 875 ஆக உயர்ந்துள்ளது. தவிர அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 83 வயது முதியவர் உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து கோவையில் கொரோனா நோய்த் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 583 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 192 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர். கோவையில் இதுவரை 44 ஆயிரத்து 257 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 1,035 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Views: - 15

0

0