ஒரே நாளில் இரு மடங்காக உயர்ந்த கொரோனா பாதிப்பு : கோவையில் தொற்றுக்கு பலியானவர்களின் மொத்த விபரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 January 2022, 9:17 pm
TN Corona -Updatenews360
Quick Share

கோவை: கோவை மாவட்டத்தில் தினசரி நாட்களை விட இன்று கொரோனா பாதிப்பு இரு மடங்காக உயர்ந்துள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்திருந்த நிலையில் நாள்தோறும் சராசரியாக 100 பேர் வரை கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனர்.

இதனிடையே இன்றைய குர்ஆன் பாதிப்பு நிலவரம் குறித்து மாநில சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று ஒரே நாளில் கோவையில் பாதிப்பு இருமடங்காக அதிகரித்துள்ளது அதன்படி இன்று 250 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர்களில் சிகிச்சை பலனின்றி 3 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 1089 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று ஒரே நாளில் 97 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 54 ஆயிரத்து 18 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது, இதுவரை 2521 பேர் உயிரிழந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Views: - 356

0

0