தமிழகத்தில் 862 பேருக்கு கொரோனா உறுதி: ஒரே நாளில் 10 பேர் உயிரிழப்பு

Author: kavin kumar
6 November 2021, 10:12 pm
Corona Status - Updatenews360
Quick Share

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 862 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 862- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 27 லட்சத்து 08 ஆயிரத்து 230- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று மட்டும் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 214 ஆக அதிகரித்துள்ளது. இன்று 1,009 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 61 ஆயிரத்து 428ஆக அதிகரித்துள்ளது. இதில் சென்னையில், இன்று ஒரே நாளில், 122 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், 99 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் நேற்று 106 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று, 122 ஆக அதிகரித்து உள்ளது. கோவை மாவட்டத்தில், நேற்று 102 ஆக இருந்த பாதிப்பு, இன்று 99 ஆக சற்று குறைந்துள்ளது.

Views: - 250

0

0