சமூக இடைவெளியை மறந்து முக கவசம் இன்றி தரிசனம்.!! கொரோனா நோய் தொற்று மக்கள் அலட்சியம்.!!

29 August 2020, 1:08 pm
Quick Share

விருதுநகர் :அருப்பு கோட்டையில் தனியார் கோவிலில் சிவன் கண் திறந்து விட்டதாக வந்த வதந்தியை நம்பி சாரை சாரையாக முக கவசம் அணியாமல் மக்கள் சம இடைவெளியை கடைபிடிக்காமல் தரிசனம் செய்தனர்.

அருப்புக்கோட்டையில் தனியார் கோவிலில் சிவன் சுவாமி கண் திறந்து விட்டதாக வந்த வதந்தியை நம்பி கூட்டமாக பொது மக்கள் முக கவசம் அணியாமலும் சம இடைவெளியை கடைபிடிக்காமல் தரிசனம் செய்தனர்.

விருதுநகர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோன நோய் தொற்றும் அதிகமாக பரவி வருகிறது மேலும் மக்களும் முக கவசம் அணியாமலும் சம இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் அருப்புக்கோட்டையில் (S BK பெண்கள் மேல் நிலை பள்ளி )தனியார் பள்ளி அருகே
ஸ்ரீமத் ஏனாதி நாயனார் சிவாலயம் உள்ளது இது தனியாருக்கு சொந்தமான கோயில் ஆகும்.

இந்த கோவிலில் சிவன் மற்றும் பார்வதி மூல தெய்வமாக இருந்து வருகின்றனர். இங்கு இருக்கும் சிவன் சுவாமி கண் திறந்து விட்டதாக ஒரு வதந்தி கிளம்பியது. இதனை தொடர்ந்து கோவிலை சுற்றியுள்ள100கும் மேற்பட்ட மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து முக கவசம் அணியாமல் சம இடைவெளியை கடைபிடிக்காமல் தரிசனம் செய்தனர்.

இதனால் மேலும் அருப்புக்கோட்டையில் கொரோன நோய் தொற்று அதிக பரவ வாய்ப்பு உள்ளது.

Views: - 26

0

0