கோவையில் குறைந்தது கொரோனா! இன்றும் பாதிப்பை விட குணமானவர்கள் அதிகம்!!

By: Udayachandran
9 October 2020, 7:41 pm
Cbe Coronaa- Updatenews360
Quick Share

கோவை : கோவை மாவட்டத்தில் இன்று 397 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த் தொற்று கடந்த சில மாதங்களாக கோவையில் தொடர்ந்து அதிகரித்து வந்த சூழலில், கடந்த ஒரு வாரமாக தொற்று பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது. கோவையில் நேற்று 448 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த சூழலில், இன்று 397 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36ஆயிரத்து 333 ஆக உயர்ந்துள்ளது. கோவையில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை தொடர்ந்து மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 483 ஆக அதிகரித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த பேர் 413 குணமடைந்து இன்று வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 31 ஆயிரத்து 103 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 4 ஆயிரத்து 746 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Views: - 58

0

0